×

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக வேட்பாளர் ஆஸ்டின் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தற்போது வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் கட்சி ஏஜென்டுகளும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு சிசிடிவி கேமரா வைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக வேட்பாளர் ஆஸ்டின் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தபால் வாக்குப்பதிவு முறைகேடு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்காததால் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கனா தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடு நடந்துள்ளதாக தபால் வாக்குப்பதிவை மீண்டும் நடத்த வேண்டும். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் எத்தனை தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதை கூட தெரிவிக்கவில்லை. தபால் வாக்குப்பதிவை மீண்டும் நடத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். …

The post கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari assembly ,DMK ,Chief Electoral Officer ,Chennai ,Austin ,Dinakaran ,
× RELATED வாக்குச்சீட்டிற்கு பணம் பெறும்...